செஸ் ஒலிம்பியாட் ஜோதி…. வீரர்களின் அணிவகுப்பு பேரணி…. தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்….!!!!!!!!!


விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக மைதானத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஒலிம்பியாட்  ஜோதி வருகை முன்னிட்டு அதற்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பரமேஸ்வரி தலைமை தாங்கி செஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஒளம்பியாட்டி ஜோதியை வரவேற்றுள்ளனர். அதன் பின் விழுப்புரம் மாவட்ட வீரர்களிடம் ஒலிம்பிக் ஜோதியை வழங்கி விழிப்புணர்வு பற்றி வீரர்களின் பேரணியை கொடியசைத்து  தொடங்கி வைத்துள்ளார்.

44வது செஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இருப்பதற்கு முன்னோட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒளம்பியாட் ஜோதியை நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்று பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் விதமாக மாவட்டந்தோறும் பல்வேறு இடங்களுக்கு சென்று நிறைவாக சென்னை மாமல்லபுரம் சென்றடைகின்றது. அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு கோவை மாவட்டத்தில் இருந்து ஒலிம்பியாட் ஜோதியை வீரர்கள் சக்திவேல் அபினேஷ் தலைமையில் பத்திற்கும் மேற்பட்டோர் எடுத்து வந்துள்ளனர். அதன் பின் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வீரன் ஹேமச்சந்திரன் பெற்றுகொண்டு அவரது தலைமையில் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு விழுப்புரம் நகரின் முக்கிய வீதியின் வழியாக பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் விதமாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மேலும் நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், சிவகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், விழுப்புரம் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, துணை தலைவர் சித்திக் அலி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், பகுதி மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன், விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் பாண்டி போன்ற பலர் கலந்து கொண்டுள்ளனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.