பென்ஷன் தாரர்களே அலர்ட்…. “இவருக்கு பென்ஷன் கிடையாது”…. கோர்ட் அதிரடி உத்தரவு…[email protected]


திருவண்ணாமலை மாவட்டத்தில் தனுஷ்கோடி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆரணியில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் 1975 ஆம் ஆண்டு தனது முதல் மனைவி உயிரோடு இருந்தபோது அவருடைய தங்கையை இரண்டாவது ஆக திருமணம் செய்து கொண்டார். இது அவருடைய முதல் மனைவிக்கு பிடிக்காமல் இருந்துள்ளது. இந்நிலையில் அவர் பணி ஓய்வு பெற்று அவருக்கு பென்ஷன் வழங்கப்பட்டு வந்தது. இதனையடுத்து தனுஷ்கோடி கடந்த 2010 ஆம் ஆண்டு மரணமடைந்தார். அதனால் அவருடைய பென்ஷன் வாங்குவது குறித்து பிரச்சனை எழுந்தது. அதன் பிறகு தனக்கு பென்ஷன் வழங்க வேண்டும் என்று தனுஷ்கோடி இரண்டாவது மனைவி சாந்தி விண்ணப்பித்தார் ஆனால் அக்கவுண்டன்ட் ஜெனரல் நிராகரித்து உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து தனக்கு பென்ஷன் வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம் விசாரித்து உத்தரவிட்டுள்ளார். அதில் 2 வது மனைவிக்கு பென்ஷன் வழங்க மறுக்கப்பட்டது சரிதான் என்று அவர் தெரிவித்துள்ளார். முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது பென்ஷன்தாரர் 2 வது திருமணம் செய்துள்ளார். அரசு ஊழியராக இருந்து கொண்டு சட்டவிரதோமாக திருமணம் செய்தது குற்றம். அதனால் இந்த திருமணம் செல்லாது. பென்ஷன் விதிகளின்படி குடும்ப பென்ஷன் வழங்கும் கேள்வியே இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் பென்ஷன் விதிகளின்படி 2 வது மனைவிக்கு குடும்பப் பென்ஷன் மறுத்ததில் தவறு ஏதும் இல்லை என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.