கர்நாடக மாநிலத்தில் பள்ளி மாணவிகள் கழிப்பறை சுத்தம் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் உள்ள நாகரி பள்ளியில் படித்து வரும் ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவிகள் சிலர் பள்ளிக்கு தாமதமாக வந்ததால், ஆசிரியர்கள் கழிப்பறையை கழுவ வைத்துள்ளனர்.இதனை அறிந்த குழந்தைகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகளை கழிப்பறை கழுவ வைத்த பள்ளி நிர்வாகம் இது நடவடிக்கை எடுக்கும்படி போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து பள்ளி மாணவி ஒருவர் கூறுகையில், கழிவறையை சுத்தம் செய்யாவிட்டால் ஆசிரியர் எங்களை அடிப்பார். அதனால் ஆசிரியர் சொல்வதை செய்ய வேண்டும். இது பற்றி அலுவலர்களிடம் தெரிவித்தாலும் அடிப்பார். கழிவறை சுத்தமாக இல்லை,நாங்கள் பயன்படுத்துவதால் நான்கு முதல் ஐந்து மாணவர்களை சுத்தம் செய்ய ஆசிரியர் கூறினார் . அதனால் நாங்கள் சுத்தம் செய்தோம் என்று மாணவி கூறியுள்ளார்.
Post Views:
0