ரூ.3,419 கோடி…,. ஷாக் அடித்த மின் கட்டணம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!!


மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் வசித்து வரும் பிரியங்கா குப்தா என்ற பெண்மணிக்கு ரூ.3,419 கோடி வீட்டு மின் கட்டணம் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியார் பகுதியில் உள்ள ஷிவ் விஹாரில் வசிப்பவர் பிரியங்கா குப்தா. இவரின் வீட்டிற்கு ஜூலை மாதம் மின் கட்டணம் ரூ.3,419 கோடி கட்ட வேண்டும் என்று மின்சார வாரியத்தின் மூலம் பில் அனுப்பி வைக்கப்பட்டது.  இதைப் பார்த்து அவரின் மாமனார் அதிர்ச்சியில் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.  உடனே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து அம்மாநில மின்வாரியத்தில் அவர் புகார் அளித்ததில் தவறு நடந்து விட்டதாக ரூ.1,300 ஆக மின்கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது. முதலில் வந்த கட்டணத்தை பார்த்து பிரியங்காவின் கணவரின் தந்தை உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.