நிலநடுக்கத்தால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள அப்ரா மாகாணம் மற்றும் மணிலா உள்ளிட்ட பகுதிகளில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் நிலநடுக்கத்தின் போது வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கியது.
இதன் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்து உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் உயிரிழப்புகள் அதிக அளவில் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 1990-ம் ஆண்டு ஏற்பட நிலநடுக்கத்தின் போது 2000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Post Views:
0