“ஊர்வலமாக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பெண்கள்”…. வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு….!!!!


பெண்கள் ஊர்வலமாக வந்து தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரி ஆட்சியரிடம் மனு கொடுத்தார்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட மகாராஜபுரம், சேந்தமங்கலம், பிச்சைக்கட்டளை, சங்கேந்தி, தலைச்சங்காடு, சீர்காழி உள்ளிட்ட 8 கிராமங்களில் வாழும் விதவை பெண்கள் ஒன்று சேர்ந்து விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்கம் நடத்தி வருகின்றார்கள். இச்சங்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மயூரநாதர் கீழவீதிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தடைந்தார்கள்.

மாவட்ட தலைவர் கஸ்தூரி தலைமையில் சங்க நிர்வாகிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் மனுவை கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, கணவனை இழந்த விதவை பெண்களுக்கு அரசு சார்பில் வீட்டு மனை பட்டா வழங்க கோரியும் வீடு கட்டி தர வேண்டும் எனவும் விதவைப் பெண்களுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் உதவித்தொகையை 1500 ஆக உயர்த்தி தரவேண்டும் எனவும் கோரிக்கையாக கேட்டுக் கொண்டிருந்தார்கள்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.