ஏரிக்கரையில் படுத்திருந்த புலி…. வலைதளத்தில் வைரலாகும் காட்சிகள்….அச்சத்தில் பொதுமக்கள்…!!


ஏரிக்கரையில் புலி படுத்திருக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இங்கு புலி மற்றும் சிறுத்தைகளின் எண்ணிக்கை உயர்ந்து இருப்பது வனத்துறையினரின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் பவுத்தூர் அருகே இருக்கும் ஏரிக்கு சிலர் சென்றுள்ளனர்.

அப்போது மறுகரையில் புலி ஒன்று படுத்து கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில் சிலர் புலியை செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அந்த காட்சிகள் தற்போது வேகமாக பரவி வருகிறது. மேலும் புலியின் நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி கிராம மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

The post ஏரிக்கரையில் படுத்திருந்த புலி…. வலைதளத்தில் வைரலாகும் காட்சிகள்….அச்சத்தில் பொதுமக்கள்…!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.