நேஷனல் ஹெரால்டு விவகாரம்…. அறப்போராட்டம் மக்கள் போராட்டமாக வெடிக்கும்…. மாஜி அமைச்சர் பகீர் தகவல்…..!!!!!!!!!!


நேஷனல் ஹெரால்டு நாளிதழ் வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை இன்று மீண்டும் விசாரணை நடத்தி வருகிறது. இதனை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் நெல்லையில் அமலாக்கத்துறை என்னும் பெயரில் பொய்  குற்றச்சாட்டை கூறி காங்கிரஸ் தலைவர்கள் மீது நடத்தும் விசாரணையை கண்டித்து மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று வண்ணார் பேட்டையில் உள்ள மாநகர காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் முன்பு அமைதி வழி சத்யகிரக போராட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த அமைதி வழி சத்யாகிரக போராட்டத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர பாண்டியன் போன்றோர் தலைமை தாங்கியுள்ளனர். இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பி இருக்கின்றனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின் தனுஷ்கோடி ஆதித்தன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ரூபாய் கூட லாபம் கிடையாது.

ஆனால் வேண்டுமென்றே ராகுல் காந்தி சோனியா காந்தி மீது பழி சுமத்தி அவர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதனால் உடனடியாக அமலாக்கத்துறை விசாரணையை  நிறுத்த வேண்டும் இல்லாவிட்டால் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறும் அறப்போராட்டம் மக்கள் போராட்டமாக வெடிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த போராட்டத்தில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் அனுராதா அம்பிகா மற்றும் சொக்கலிங்க குமார், அன்சார்  ராஜா, பாலசுப்ரமணியம், கண்ணன் போன்ற கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டுள்ளனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.