இளைஞன் செய்த டார்ச்சர்….. தூக்கில் தொங்கிய பிளஸ் 1 மாணவி…. பெரும் அதிர்ச்சி….!!!!


உத்திரபிரதேச மாநிலம் பிலிபட் மாவட்டம் சங்கரகிரி அருகே உள்ள சண்டே கிராமத்தை சேர்ந்த பிளஸ் ஒன் மாணவியை அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் என்ற இளைஞன் பல நாட்களாக பின் தொடர்ந்து வந்துள்ளான். மாணவி பள்ளிக்கு செல்லும்போது வீடு திரும்பும் போது என தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளான். தன்னை பின்தொடர வேண்டாம் என அந்த மாணவி பலமுறை எச்சரித்தும், அவர் இதே செயலில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சஞ்சய் பின் தொடர்வதால் பல நாட்களாக மன உளைச்சலில் இருந்த மாணவி நேற்று மாலை தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் பெற்றோர்கள், உறவினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தன. இது தொடர்பாக போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.