“பெண்கள் முன்னேற்றம் என்ற இலக்கை அடைய வேண்டும்”…. தேசிய விருது பெற்ற நடிகை டுவிட் பதிவு…!!!


பிரபல ஒடிசா நடிகை பிரக்ருதி மிஸ்ரா கடந்த ஆண்டு அவர் தேசிய விருது பெற்றார். சமீபத்தில் இவர் பிரேமம் என்ற ஒடிசா படத்தில் நடிகர் பாபுஷான் மொகந்தியுடன் இணைந்து நடித்திருந்தார். இந்நிலையில் இருவரும் நடிகர் மொகந்தியும் காரில் புவனேஸ்வர் விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த காரை வழிமறித்த மொகந்தின் மனைவி திருப்தி, அவர்கள் தவறான உறவு வைத்துள்ளார்கள் என்று கருதி அடித்து உதைத்தார் .அதுமட்டுமில்லாமல் காரில் இருந்த நடிகை மிஸ்ராவின் தலைமுடியை பிடித்து இழுத்தார். இதில் திக்குமுக்காடி போன மிஸ்ரா அங்கிருந்து தப்பி ஓடினார். இருப்பினும் அவரை விடாத திருப்தி நடுநோட்டில் அவரை விரட்டி விரட்டி அடித்தார். ஒரு வழியாக தப்பிய மிஸ்ரா அங்கிருந்து ஆட்டோவில் ஏறி ஓடினார். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் மிஸ்ரா பதிவிட்டுள்ளார். அதில், “பெண்கள் முன்னேற்றத்திற்காக வேலை செய்யும்போது களத்தில் எங்கள் மீது வன்முறை நிகழ்த்தப்படுகிறது. அவர்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை. இதை மாற்றுவதற்கான பெரிய இலக்கை நோக்கி நான் சென்று கொண்டிருக்கிறேன். இதை சார்ந்த வேலை செய்பவர்கள் இன்னும் அதிகமாக வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். நான் இன்னும் என்னுடைய வேலையை முழுமையாக முடிக்கவில்லை. இறுதியாக ‘பெண்கள் முன்னேற்றம்’ என்று அந்த இலக்கை அடைய நாம் இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டி இருக்கிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார். இது விவகாரம் குறித்து மிஸ்ராவின் தாயார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைப் போல திருப்தியும் தங்களது வாழ்க்கைக்கு இடையூறாக விளைவிக்கும் வகையில் மிஸ்ரா நுழைவதாக கூறி புகார் அளித்துள்ளார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.