DMK கூட்டணில இருந்தாலும்…. தவறை சுட்டிக்காட்டும் திருமா… விமர்சனத்தை தவிடுபொடி ஆக்கி கருத்து….!!!!


திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் அமைந்துள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்துள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி. கூட்டணியாக இருந்தாலும் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய இடத்தில் குரல் கொடுக்கும் கட்சிகளாக விடுதலைச் சிறுத்தை கட்சி இருக்கின்றது.

பொதுவாக திமுக கூட்டணியில் இருக்கும் எந்த கட்சிகளும் திமுக அரசுக்கு எதிரான அறிக்கைகள் போராட்டங்கள் எதையும் செய்வதில்லை என்று கடந்த கால ஆளுங்கட்சிகள் விமர்சிப்பார்கள். அப்படிப்பட்ட விமர்சனங்களுக்கு நடுவே நாங்கள் யாரும் மக்கள் பிரச்சனைகளை பேசாமல் இருந்ததில்லை திமுக கூட்டணியில் இருந்தாலும் கூட திமுக அரசை சுட்டிக்காட்ட வேண்டிய இடத்தில் சுட்டிக்காட்ட தான் செய்கின்றோம் என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு திமுக கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு இருக்கின்றது. அந்த பொறுப்பை உணர்ந்து செயல்படும் கட்சிகளில் ஒன்று தான் விடுதலை சிறுத்தை கட்சி.

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி விவகாரத்திலும் கூட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அரசுக்கு எதிராக தனது ஸ்டேட்மெண்ட்டை தெளிவாக சொல்லி வருகிறது. உளவுத்துறை இந்தப் பிரச்சினையை திசை திருப்புவதாக குறிப்பிட்டுள்ள விடுதலைச் சிறுத்தை கட்சி தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

திமுக கூட்டணியில் இருந்தாலும் கூட மக்களுக்கான பிரச்சினைகளில் விடுதலைச் சிறுத்தைகள் உறுதியாக நிற்கும் குரல் கொடுக்கும் என்பதை உணர்த்தும் வகையில் விடுதலை சிறுத்தைகளின் செயல்பபாடுகள் இருக்கும் என அக்கட்சியினர் கூறி வருகின்றனர். அதை நிரூபிக்கும் வகையில் விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனின் கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

The post DMK கூட்டணில இருந்தாலும்…. தவறை சுட்டிக்காட்டும் திருமா… விமர்சனத்தை தவிடுபொடி ஆக்கி கருத்து….!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.