தமிழக மாணவர்களுக்கு முக்கிய அப்டேட்…. ஜூலை 27 வரை…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!


தமிழகத்தில் கடந்த ஜூன் இருபதாம் தேதி பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்தது. அதன்படி அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஏற்கனவே கால அவகாசம் முடிவடைந்தது. இருந்தாலும் கூடுதல் அவகாசம் வழங்கி உயர்கல்வித்துறை உத்தரவிட்டது.

இந்நிலையில் அரசு கல்லூரிகளில் பி.காம், பிஎஸ்சி, பி ஏ உள்ளிட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிவடையும் தருவாயில் உள்ளது.இருப்பினும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூலை 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

The post தமிழக மாணவர்களுக்கு முக்கிய அப்டேட்…. ஜூலை 27 வரை…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.