“இணையத்தில் தீயாய் பரவி வரும் செய்தி”…. பதறிப்போன விஜய் பட தயாரிப்பாளர்….!!!!!


இணையத்தில் பரவி வரும் போலி செய்தியை கண்டு தயாரிப்பாளர் தில் ராஜு பதரிபோய் உள்ளார்.

தெலுங்கு சினிமா உலகில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருகின்றார் தில் ராஜீ. இவர் திரைப்படங்களை தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலமாக தயாரித்து வருகின்றார். இந்த நிலையில் தற்போது வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தையும் தில் ராஜூ தான் தயாரிக்கின்றார்.  இத்திரைப்படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்  நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு அறிமுக நடிகர், நடிகைகள் தேவைப்படுவதாகவும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் இணையத்தில் தகவல் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த பலரும் விண்ணப்பித்து வருவதாக சொல்லப்படுகின்றது. இதை பார்த்த ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் அதிர்ச்சியடைந்து தங்கள் தரப்பில் இருந்து இதுபோல எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என விளக்கம் அளித்து இருக்கின்றது. மேலும் இது போன்ற போலி அறிவிப்புகளை கண்டு யாரும் ஏமாற வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.