“ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியது காட்டுமிராண்டித்தனம்”…. அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு….!!!!!!!


உக்ரைன் உலகின் மிகப்பெரிய தானியங்கள் ஏற்றுமதி நாடாக  இருந்து வருகின்ற சூழலில் அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் ஒரு தொடங்கிய ரஷ்யா கருங்கடல் பகுதியில் போர்க்கப்பலை நிறுத்தி அந்த கடல் வழியாக உக்ரைன் தானியங்கள் பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு தடை ஏற்படுத்தியுள்ளது. இது சர்வதேச அளவில் உணவு நெருக்கடியை ஏற்படுத்தியதால் ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை ஐநா முன்னெடுத்து இருக்கின்றது. அதன் பலனாக கடந்த வெள்ளிக்கிழமை தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் ரஷ்யாவும் உக்ரைனும்  கையெழுத்திட்டு இருக்கின்றன.

மேலும் அந்த ஒப்பந்தத்தில் கருங்கடல் பகுதியில் உள்ள உக்ரைன்  துறைமுகங்கள்தாக்குதல் மீது நடத்தப்படாது என ரஷ்யா உறுதியளித்துள்ளது. ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தான சில மணி நேரங்களிலேயே ஒப்பந்தத்தை மீறி கருங்கடலில் உள்ள உக்ரைனில் ஒடேசா துறைமுகம் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது. துறைமுகத்தின் மீது ரஷ்யா சராமரியாக ஏவுகணை வீசி தாக்கியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும் தாக்குதலில் ஏற்பட்ட சேத விவகாரங்கள் பற்றி உக்ரைன் தெரிவிக்கவில்லை. ஒப்பந்தத்தை மீறி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஐநா வன்மையாக கண்டித்து உள்ளது. இந்த சூழலில் ஒடேசா துறைமுகத்தில் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் கூறியுள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒடிசா துறைமுகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் துறைமுகத்தில் இருந்து நிறுத்தப்பட்டிருந்த உக்ரைனின் போர்க்கப்பல் அளிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஒடேசா துறைமுகத்தில் அமெரிக்காவில் வழங்கப்பட்ட கப்பல் எதிர்ப்பு ரயவுகணைகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதம் கிடங்கும்நீர் மூலமாகக்கப்பட்டதாக ரஷ்ய ராணுவம்  தெரிவித்துள்ளது. எனினும் இது பற்றி உக்ரைன் தரப்பு உடனடியாக எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை. இதற்கு ஒப்பந்தத்தை மீறி ஒடேசா துறைமுகம் மீது ரஷ்ய தாக்குதல் நடத்தியுள்ளது. காட்டுமிராண்டித்தனம் என சாடிய  உக்ரைன் அதிபர் ஜெலஸ்க்கி  இந்த தாக்குதல் ரஷ்யா உடனான பேச்சுவார்த்தைக்கான சாத்தியத்தை அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அதே சமயம் ஒப்பந்தத்தில் வெளிப்படையான மீறல் இருந்தபோதிலும் தானியே ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஜெலன்ஸ்கி  கூறியுள்ளார்.

The post “ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியது காட்டுமிராண்டித்தனம்”…. அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு….!!!!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.