இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இந்துமதி என்பவர் வசித்து வந்துள்ளார். கடத்த 5 மாதங்களுக்கு முன்பு இந்துமதிக்கு குமரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இந்துமதி 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் மாமியார் துன்புறுத்தியதால் கடந்த 1 1/2 மாதத்திற்கு முன்பு இந்துமதி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். ஆனாலும் இந்துமதியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து செல்ல அவரது கணவரும், மாமியாரும் வரவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த இந்துமதி “எனது சாவுக்கு மாமியார்தான் காரணம். நானும் பாப்பாவும் செல்கிறோம்” என அவரது சகோதரிக்கு வாட்ஸ் அப்பில் ஆடியோ பதிவு செய்து அனுப்பியுள்ளார்.
பின்னர் இந்துமதி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அந்த ஆடியோவை கேட்டு அதிர்ச்சியடைந்த இந்துமதியின் சகோதரி வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்துள்ளார். அப்போது இந்துமதி தூக்கில் சடலமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இந்துமதியின் உடலை மீட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Post Views:
0