தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் கீழ் பி எஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் வருங்கால வைப்பு நிதி மட்டுமல்லாமல் இன்னும் சில வசதிகளும் பலன்களும் உள்ளன. அந்த வகையில் எந்த ஒரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் pf கணக்குத் தாரர்களுக்கு காப்பீடு கிடைக்கும். அதன்படி பிஎப் கணக்கு தாரர்கள் தொழிலாளர் டெபாசிட் காப்பீடு திட்டத்தின் கீழ் 7 லட்சம் ரூபாய் வரை இன்சுரன்ஸ் வழங்குகின்றது. இதற்காக எந்த ஒரு கட்டடம் அல்லது பிரீமியம் தொகையை பிஎஃப் கணக்குதாரர் செலுத்த வேண்டிய அவசியமில்லை. அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்கள் என அனைவருக்கும் இந்த இன்சூரன்ஸ் கிடைக்கின்றது.
பிஎஃப் கணக்குதார் இறந்துவிட்டால் நாமினிக்கு 7 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை அப்படியே கிடைக்கும். இதன் பலனை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட பி எப் கணக்கு தாரர் கூடுதலாக எந்த ஒரு பிரீமியம் தொகை அல்லது வேறு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை பிஎஃப் கணக்கு தாரருக்கு நாமினிகள் இல்லை என்றால் அவரது கணவன் அல்லது மனைவி திருமணமாகாத மகள்கள் மற்றும் வயதுவரம்பு மகன்கள் ஆகியோருக்கு இன்சூரன்ஸ் பலன் கிடைக்கும்.
Post Views:
0