விவசாய செயலி மூலம் மோசடி கும்பல் ஒன்று தன் கைவரிசையை காட்டியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி மாரிமுத்து என்பவரிடம் ஆன்லைனில் பணம் அனுப்புவதாக கூறி 27 ஆயிரம் மதிப்புள்ள முன்னுறு கிலோ அரிசியை வாங்கி ஒரு நபர் ஏமாற்றி உள்ளார். தனது நிலத்தில் விளைந்த சீராக சம்பா நெல்லை விற்க அலைபேசி செயலில் மாரிமுத்து விளம்பரம் செய்துள்ளார்.9789832974 என்றஅலைபேசி எண்ணில் கோயம்புத்தூரில் இருந்து குமார் பேசுவதாக கூறி அரிசியை மொத்தமாக அனுப்பி வைத்தால் ஆன்லைனில் உங்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்துவதாக கூறியுள்ளார்.
அதனை நம்பிய மாரிமுத்து குண்ணியமுத்தூர் முகவரிக்கு தனியார் பார்சல் சர்வீஸ் மூலமாக 300 கிலோ அரிசியை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அதன் பிறகு பணம் கேட்டு பலமுறை அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு முறையாக பதில் அளிக்கவில்லை. பின்னர் போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாரிமுத்து போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் தென் மாவட்டங்களில் பலரிடம் இந்த மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே விவசாயிகள் இது போன்ற ஆன்லைன் செயலிகளை நம்பி மோசடி அவர்களிடம் ஏமாற வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
The post விவசாயிகளே உஷார்…. ஆப் மூலம் மோசடி செய்யும் கும்பல்…. யாரும் ஏமாறாதீங்க…. போலீஸ் எச்சரிக்கை….!!!! appeared first on Seithi Solai.