இன்று காலை 10.15 மணிக்கு…. நாட்டின் 15 வது குடியரசு தலைவராக…. பதவியேற்கிறார் திரௌபதி முர்மூ….!!!?


நாட்டின் 15 ஆவது குடியரசு தலைவராக இன்று காலை 10.15 மணியளவில் திரௌபதி முர்மூ பதவி ஏற்கிறார். குடியரசு தலைவர் பதவியில் இருந்து ராம்நாத் கோவிந்த் நேற்றோடு ஓய்வு பெற்ற நிலையில் இன்று 15-வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மூ பதவிஏற்கிறார். நாடாளுமன்ற வளாகத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்வி ரமணா அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இந்த விழாவில் பிரதமர் மோடி மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இதற்காக நாடாளுமன்ற மைய மண்டபத்தில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது. மேலும் குடியரசு தலைவராக பதவி ஏற்ற பின்னர் அவருக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்படும். அதன் பிறகு அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார். அதற்கு முன்னதாக இன்று காலை மகாத்மா காந்தியடிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ள திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர் மாளிகையில் சம்பிரதாய வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.