“இந்த மனசு தாங்க கடவுள்”…. போலீசரின் மனிதாபிமானம்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!!!!!


சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரிடம்  மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டுகள்  குவிந்து வருகின்றது.

சென்னை புரசைவாக்க பகுதியில் உடல் முழுவதும் பெயிண்ட் தடவிய நிலையில் ஒரு நபர் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றிக் கொண்டிருந்தார். அவரது நடவடிக்கை பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக இருந்தது இதனை அடுத்து வேப்பேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி வேலு மனிதாபிமான முறையில் அடிப்படையில் அந்த நபரை அழைத்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் அவரது பெயர் கருணாகரன் என்பதும் கரும்பு தோட்டம் குடிசை மாற்று வாரியத்தில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்ததும் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து அந்த நபரை சலூன் கடைக்கு அழைத்து சென்று முக சவரம் செய்து குளிப்பாட்டி புதிய உடைகளையும் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு வாங்கி கொடுத்துள்ளார். அதோடு கருணாகரன் வலியுறுத்தி கேட்டபடி தொப்பியும் கண்ணாடியும் கூட வாங்கிக் கொடுத்துள்ளார். அதன் பின் அந்த நபரை ஹோட்டலுக்கு அழைத்து சென்று சாப்பிட வைத்துள்ளார். அதனை தொடர்ந்து அவரது குடியிருப்பிற்கு சென்று அவரை ஒப்படைத்துள்ளார். மனிதாபிமான முறையில் இன்ஸ்பெக்டர் பாண்டி வேலை செய்த இந்த செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றார்கள்.

The post “இந்த மனசு தாங்க கடவுள்”…. போலீசரின் மனிதாபிமானம்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.