மாநிலங்களவை எம்.பியாக….. நாளை பதவியேற்கிறார் இளையராஜா…..!!!!


விளையாட்டு, சமூக சேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு 12 பேரை நியமன எம்.பிகளாக ஜனாதிபதி நியமிக்க முடியும். அப்படி தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவை மாநிலங்களவை நியமன எம்பியாக ஜனாதிபதி நியமித்துள்ளார்.

கடந்த திங்களன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோர் பதவியேற்றுக்கொண்டார். ஆனால் இளையராஜா பதவி ஏற்க வில்லை. அமெரிக்காவில் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றதால் அவர் பதிவு ஏற்கவில்லை என தகவல் வெளியானது. இந்நிலையில் இளையராஜா மாநிலங்களவை எம்பியாக நாளை பதவி ஏற்க உள்ளார். இதற்காக அவர் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.