இவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?…. இந்திய பிரதமருக்கு கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி….!!!!


முப்படைகளில் இளைஞர்களுக்கு 4 வருடங்கள் பணி என்ற அடிப்படையில் ஆட்சேர்க்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு வட மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்துள்ள சூழ்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் ஆட்சேர்க்கும் நடைமுறைகளை ராணுவம், கடற்படை துவங்கிவிட்டது. இதற்குரிய அறிவிப்புகளை முப்படைகளும் வெளியிட்டுள்ளது. இதனிடையே அக்னிபத் திட்டத்திற்கு காங்கிரஸ் உட்பட பல எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தை கைவிடக் கோரி காங்கிரஸ் சார்பாக ஜனாதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அக்னிபத் திட்டம் குறித்து பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “ஒவ்வொரு வருடமும் 60,000 ராணுவ வீரர்கள் ஓய்வு பெறுகிறார்கள். அவற்றில் வெறும் 3000 பேருக்குத்தான் அரசு வேலை கிடைக்கிறது. 4 ஆண்டுகளுக்கு பின் ஒவ்வொரு வருடமும் வெளிவரும் ஆயிரக்கணக்கான அக்னி வீரர்கள் எதிர்காலம் எப்படி இருக்கும்..? பிரதமரின் இந்த புது ஆராய்ச்சியால் நாட்டுக்கும் பாதுகாப்பு குறைவு. ஆகவே இளைஞர்களின் எதிர்காலமும் ஆபத்தில் முடிகிறது” என்று பதிவிட்டுள்ளார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.