பாசன கால்வாயில் குடியிருப்பு வாசிகள் குப்பைகளை கொட்டி வருவதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விவசாயிகளின் முக்கிய நீராதாரமாக திருமூர்த்தி அணை இருக்கின்றது. இனிமேல் அணையின் வாய்க்காலில் கழிவு நீர் கொட்டப்படுவதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியுள்ளதாவது, விவசாய தொழிலுக்கு முக்கியமாகவுள்ள பாசன நீரைக் கொண்டுசென்று விவசாயிகளும் சேர்வதற்கு பாசனக்கால்வாய்கள் கைகொடுக்கின்றது. திருமூர்த்தி அணையில் இருந்து புறப்படும் உடுமலை கால்வாயின் வழித்தடத்தில் உடுமலை நகராட்சி மட்டுமல்லாமல் அதனை ஒட்டிய ஊராட்சி பகுதிகளும் இருக்கிறது.
இங்கு புதிதாக பல குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதனால் தினசரி டன் கணக்கில் குப்பைகள் குவிந்து வருகின்றது. இந்த குப்பைகளை அப்புறப்படுத்துவதில் உள்ளாட்சி நிர்வாகங்கள் அலட்சிய போக்கை காட்டி வருகின்றார்கள். பாலிதீன் கழிவுகள், பழைய பஞ்சு மெத்தைகள், துணிகள், ரெக்ஸின் பைகள், உணவு கழிவுகள் ஆகிய அனைத்து விதமான கழிவுகளையும் குடியிருப்பு வாசிகள் பாசன கால்வாயில் கொட்டி செல்கின்றார்கள்.
சில பகுதிகளில் குப்பை கொட்டுவதை தடுக்க முயற்சிக்கும் விவசாயிகளிடம் குடியிருப்பு வாசிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார்கள். பாசன கால்வாய் என்பது பல்லாயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரம் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். பாசன கால்வாய்களின் முக்கியத்துவம் பற்றி குடியிருப்பு வாசிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆகையால் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.
The post “பாசன கால்வாயில் குப்பைகளை கொட்டி வரும் குடியிருப்புவாசிகள்”…. விவசாயிகள் வேதனை….!!!! appeared first on Seithi Solai.