ஈரானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 22 பேர் பலியாகி உள்ளனர்.
பருவநிலை மாற்றம் சர்வதேச அளவில் மிகப்பெரிய பிரச்சினையாக மாற்றம் கண்டு வருகின்றது. இதனால் பல உலக நாடுகளில் பருவம் தவறிய மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றது. அந்த வகையில் ஈரானில் பல ஆண்டுகளாக வறட்சியை சந்தித்து வந்த நிலையில் திடீரென்று பருவ மாற்றத்தின் விளைவால் நேற்று முன்தினம் கனமழை கொட்டி தீர்த்தது.
விடாமல் பெய்த கனமழையால் அங்குள்ள நீர்நிலைகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்து குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் 100க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது. திடீர் வெள்ளத்தால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 22 பேர் உயிரிழந்ததாகவும், ஆறு பேர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய மக்கள் அனைவரும் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் யூசப் கரேகர் தெரிவித்துள்ளார்.
Post Views:
0