பிரபல நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம்…. ஆதரவுகள் மற்றும் எதிர்ப்புகள்….!!!

பிரபல நடிகரின் நிர்வாண புகைப்படத்திற்கு எதிர்ப்புகளும், ஆதரவுகளும் கிளம்பியுள்ளது.

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் ரன்வீர் சிங் கடந்த 2010-ம் ஆண்டு சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இவர் நடித்த ஏராளமான படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்ததால் பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்துள்ளார். இவர் தற்போது ஒரு வார இதழுக்காக நிர்வாணம் ஆக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை ரன்வீர் சிங் தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படத்திற்கு பாலிவுட் நடிகர் மனிஷ் மல்கோத்ரா, மஹீப் கபூர், பானி ஜட்ஜ், தியா மிர்சா, மசாபா குப்தா, லில்லி சிங் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், அவர் நிர்வாணமாக இருந்த புகைப்படத்திற்கு நடிகை சமந்தா ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.