தடுப்பு சுவர் மீது மோதிய வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!


தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மகன் இருந்துள்ளார். நேற்று ஜீவா மோட்டார் சைக்கிளில் சிதம்பரம்- சமயபுரம் புதிய தேசிய நெடுஞ்சாலையில் பனமங்கலம் அருகே இருக்கும் பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பாலத்தின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜீவாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜீவா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.