மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பெருவளப்பூர் மேற்கு வீதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மஞ்சுளா(40) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களது வீட்டிற்கு அருகில் இருக்கும் மின் கம்பத்தில் இருந்து மின்சார வயர் அறுந்து கீழே விழுந்தது. இதனை பார்க்காமல் மஞ்சுளா மின்சார வயரை மிதித்துள்ளார்.
இதனால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மஞ்சுளா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத சோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Post Views:
0