கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்து குமரியில் கொட்டிய லாரிக்கு பேரூராட்சி நிர்வாகத்தினர் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த கோழி மற்றும் மீன் கழிவுகளை லாரியில் ஏற்றி வந்து கொட்டுகின்றனர். நேற்று மாலை தேவசகாயம் மவுண்ட் நான்கு வழிச்சாலை பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு லாரியிலிருந்து மூட்டை முட்டையாக கழிவுகளை இறக்கியுள்ளனர்.இதனை அவ்வழியாக சென்ற ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் பார்த்துள்ளார்.
இதனை அடுத்து லாரி ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில் மூட்டைகளில் பிளாஸ்டிக் மற்றும் காகித கழிவுகள் இருந்தது தெரியவந்தது. இந்த கழிவுகளை கேரளாவில் இருந்து ஏற்றி வந்து கொட்டியுள்ளனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுகளை கொட்டிய குற்றத்திற்காக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
The post கேரளாவில் இருந்து கொட்டப்பட்ட கழிவுகள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!! appeared first on Seithi Solai.