தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஒரு முக்கிய அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உலக நாடுகளில் கொரோனா தொற்றானது வேகமாக பரவி வருவதால், வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வைரஸை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முதற்கட்ட பணியாக அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதேபோன்று இந்தியாவிலும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் 200 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நம் நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 நாட்கள் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற இருக்கிறது.
இந்த தடுப்பூசி முகாமில் இலவச கோவிட் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய பாதுகாப்பு கருதி பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். அதன் பிறகு கொரோனா தொற்றின் காரணமாக தமிழக முதல்வர் சமீபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதனையடுத்து ஏராளமான மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதோடு, உயிர் இழந்தும் உள்ளனர். எனவே பொது மக்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என ஆளுநர் ஆர்.என் ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Post Views:
0