தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 23 கிராமங்களில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இரவு முகாம் நடத்தி வருகிறது. இந்த முகாம் வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர் அல்லாதவர் களுடனான உறவு மற்றும் பிணைப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது. இந்த முகாம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு காரைக்குடி மண்டல மேலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வங்கி அதிகாரிகள் விவசாய கடன் பெறுதல் மற்றும் அதை உரிய முறையில் திருப்பி செலுத்துதல் போன்ற அறிவுரைகளை வழங்கினர்.
அதன் பிறகு உரிய முறையில் கடனை திருப்பி செலுத்திய விவசாயிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் முத்ரா கடன்கள், SSY, APY, PMJJBY போன்ற திட்டங்கள் குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 10 மற்றும் 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியதோடு, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 1.57 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவியும் வழங்கப்பட்டது. மேலும் முகாமில் கிராம நிர்வாக அலுவலர், அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், விவசாயிகள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Post Views:
0