சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சாதனை படைத்தார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பெருந்தலைவர் காமராஜர் இயக்கம் நடத்திய பல்வேறு போட்டிகளில் சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர். கட்டுரை போட்டியில் கணிதவியல் முதுகலை இரண்டாம் ஆண்டு படிக்கும் பழனிபிரியா முதல் பரிசை வென்றார்.
பேச்சுப்போட்டியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படிக்கும் உமாதேவி முதல் பரிசு வென்றுள்ளார். மேலும் மூன்றாம் பரிசை முதுகலை இரண்டாம் ஆண்டு ஆங்கிலத் துறை மாணவி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
The post “சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சாதனை”…. பல்வேறு போட்டிகளில் வெற்றி….!!!!! appeared first on Seithi Solai.