கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் செங்கல் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கர்நாடகாவில் கனமழை பெய்ததன் காரணமாக அணைகளில் இருந்து பெரும் அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்படி மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்தது. பின் அணையின் பாதுகாப்பு கருதி அதை காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. பின் முக்கொம்பு மற்றும் கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றிற்கு திருப்பி விட்டப்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள செங்கல் சூளைகள் வெள்ள நீரில் மூழ்கியது. மேலும் சுடாத கற்கள் தண்ணீரில் கரைய தொடங்கியது. இதனால் செங்கல் உற்பத்தியாளர்களும் தொழிலாளர்களும் தவிர்த்து வந்தார்கள். இந்த நிலையில் தற்போது வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது.
இது பற்றி செங்கல் உற்பத்தியாளர்கள் கூறியுள்ளதாவது, சென்ற மே மாதத்தில் அவ்வபோது பெய்த கனமழையால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இப்பொழுது கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுடாத லட்சக்கணக்கான கற்கள் நீரில் மூழ்கி கரைந்து போனது. இதனால் ஒவ்வொரு செங்கல் உற்பத்தியாளர்களுக்கும் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கின்றது. இந்த நிலை மாற பல நாட்கள் ஆகலாம். செங்கல் செய்வதற்கான களம் காய்ந்த பிறகு தான் மீண்டும் உற்பத்தி பணியை மேற்கொள்ள முடியும். ஆகையால் செங்கலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டிருக்கின்றது என கூறியுள்ளார்கள்.
Post Views:
0