தமிழகத்தில் செப்டம்பர் மாதம் முதல்…… விவசாயிகளுக்கு மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!!


சம்பா பருவ சந்தை காலம் அக்டோபர் முதல் செப்டம்பர் வரை ஆகும், ஆனால் தமிழகத்தில் சம்பா பருவ சாகுபடியின் போது பருவமழையால் நெல் மூட்டைகள் சேதமடைய வாய்ப்பு உள்ளதால், விவசாயிகளின் நலன் கருதி முன்கூட்டியே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நெல் கொள்முதலை வழக்கமான அக்டோபர் மாதத்துக்கு பதிலாக ஒரு மாதத்துக்கு முன்கூட்டியே, செப்டம்பரிலேயே தொடங்குமாறு பிரதமருக்கு ஜூன் 21ம் தேதி முதலமைச்சர் கடிதம் எழுதினார்.

இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது. இது குறித்த அறிவிப்பை மாநிலங்களவையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் வெளியிட்டார். மேலும் விதைப்பு காலத்திற்கு முன்பே குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்படும் எனக்கூறிய நரேந்திர சிங் தோமர், இதனால் விவசாயிகள் ஒரு குறிப்பிட்ட பயிரை விதைப்பதற்கு முன்கூட்டியே முடிவை எடுக்க முடியும் என தெரிவித்தார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.