ரயில் பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ரயில் சேவைகளின் கட்டணம் குறைவாக இருப்பதால் பெரும்பாலான மக்கள் ரயிலில் செல்வதற்கே விரும்புகின்றனர். இதன் காரணமாக ரயில் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகள் ரயில்வே நிர்வாகத்தினால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயிலில் டிக்கெட் முன்பதிவு ரத்து செய்த பிறகு பணத்தை திரும்ப பெறுவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. இதனால் ரயில்வே நிர்வாகம் ஆன்லைன் மூலமாக ரீபண்ட் பணத்தை பெறுவதற்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியது. அதன்படி IRCTC ipay என்ற இணையதளத்தின் மூலமாக ரீபண்ட் பணத்தை உடனடியாக பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தை நடைமுறைப் படுத்தியதில் இருந்து மோசடிகள் நடைபெறுவதாக தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
ஏனெனில் ரீபண்ட் பணத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்றால், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை கேட்டு வாடிக்கையாளர்களிடமிருந்து பண மோசடி செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதில் யுபிஐ பயன்படுத்தியும் மோசடி செய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. எனவே ரயில்வே நிர்வாகத்தில் இருந்து செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு ஏதேனும் விவரங்களை கேட்டால் வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் ரீபன்ட் பணத்தை திரும்ப வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் செலுத்துவதற்கு IRCTC ஊழியர்கள் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு வங்கி கணக்கு எண், டெபிட் கார்டு கிரெடிட் கார்டு, யுபிஐ மற்றும் ஓடிபி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை கேட்கப் படமாட்டாது எனவும் ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
Post Views:
0