“பணத் தகராறில் பெண்ணை அடித்துக் கொன்ற வழக்கு”….. ஐந்து பேர் கைது….!!!!!


பணத் தகராறில் பெண் ஒருவரை அடித்துக் கொன்ற வழக்கில் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே இருக்கும் கணவாய் புதூர் ஊராட்சியில் உள்ள ராமமூர்த்தி பகுதியில் சென்ற 17ஆம் தேதி ரயில்வே தண்டவாளம் அருகே 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீவெட்டிபட்டி போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். பின் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் போலீசார் விசாரணையில் பல தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்தப் பெண் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் பகுதியைச் சேர்ந்த மலர்விழி என்பது தெரியவந்தது. இவர் பணம் வட்டிக்கு கொடுக்கும் தொழிலை செய்து வருகின்றார்.

இந்த நிலையில் கோவிந்தராஜ் என்பவர் மலர்விழியிடம் ஒன்றரை லட்சம் பணம் வாங்கியுள்ளார். இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகின்ற நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பணம் கொடுக்காமல் இருந்திருக்கின்றார். இதனால் சம்பவத்தன்று கோவிந்தராஜ் தனது அக்கா புனிதா வீட்டில் இருந்த நிலையில் மலர்விழி பணம் கேட்டு அவரிடம் தகராறு செய்திருக்கிறார். இதனால் கோபமடைந்த கோவிந்தராஜ் மலர்விழியை கன்னத்தில் ஓங்கி அடித்துள்ளார். இதில் மலர்விழி மயக்கம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். இதனால் கோவிந்தராஜ் கார் உரிமையாளர் அன்பு ஆனந்த் என்பவர் வரவழைத்து மலர்விழியின் உடலை எடுத்துச் சென்று ராமமூர்த்தி நகர் ரயில்வே தண்டவாளம் அருகே போட்டு இருக்கின்றார். இதனால் போலீசார் கோவிந்தராஜ், அவருக்கு உடந்தையாக இருந்த கார் உரிமையாளர் அன்பு ஆனந்த், அக்காள் புனிதா, பிரபாவதி, தாய் விஜயகுமாரி உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.