தமிழ் திரைப்படத்தில் ஒரு நடிகர் எப்படி அந்த படத்திற்கு முக்கியமோ அதே போல தான் காமெடி நடிகர்களும் மிகவும் அவசியம். அந்த வகையில் தற்போது தமிழ் திரைப்படத்தில் ஒரு முக்கியமான நகைச்சுவை நடிகர் என்றால் அது முனிஷ்காந்த் தான். காமெடி நடிகர் ராம்தாஸ் என்று சொன்னால் நம்மில் பல பேருக்கு தெரியாது. ஆனால் முனிஷ்காந்த் என்று சொன்னால் முதலில் நினைவிற்கு வருவது முண்டாசுப்பட்டி படத்தில் நடித்த முனிஷ்காந்த் தான்.
அதேபோல தற்போது வரை நடிகர் முனிஷ்காந்த் நடித்த மரகத நாணயம் என்ற திரைப்படத்தை யாராலும் மறக்கவே முடியாது. இந்த படத்தில் ராமதாஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து தனது நடிப்பில் அனைவரையும் மிரட்டி இருப்பார். தற்போது வரை மக்கள் மனதில் முனிஷ்காந்த் இருந்து வருகிறார். இப்படிப்பட்ட ஒரு நிலைமையில் முனீஸ்காந்த்துக்கு சுமார் 56 வயது ஆகிறது. தனது வாழ்க்கையில் அதுவும் சினிமா வாழ்க்கையில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பல வகையான விருதுகளை பெற்றுள்ளார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.

இவர் அந்த படத்திற்கு முன்னால் பல படங்களில் நடித்திருந்தாலும் முண்டாசுப்பட்டி படம் தான் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. தற்போது டான் படத்திலும் சிறப்பாக நடித்திருப்பார். என்ன எப்படி இருந்தாலும் தற்போது ஒரு நடிகர் என்றால் தனது வாழ்க்கையில் கூடிய விரைவில் ஒரு திருமணம் செய்து வருவது தற்போது உள்ள காலகட்டத்தில் மிகவும் முக்கியமானது ஆகும்.

அந்த வகையில் தனது 56 வது வயதில் தான் நடிகர் முனிஷ்காந்த் திருமணம் செய்துள்ளார். சென்னை வடபழனியில் இவரது திருமணம் நடைபெற்றுள்ளது. தேன்மொழி என்ற பெண்ணை மணமுடித்த ராம்தாஸிற்கு நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.