பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை தொடர்ந்து தற்போது மூன்றாவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இதற்கிடையே குக் வித் கோமாளி சீசன் 3 வைல்ட் கார்டு சுற்று நடைபெற்று வருகிறது. இதில் தற்போது முன்பு வெளியேறிய போட்டியாளர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டு இருகிறது.

இந்த வைல்ட் கார்டு சுற்றில் இருந்து யார் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் என்பது குறித்து தெரியவில்லை. ஆனால் ரசிகர்கள் முத்துகுமார் அல்லது சந்தோஷ் தான் சென்று இருப்பார்கள் என சொல்லி வருகின்றனர்.மேலும் நேற்று குக் வித் கோமாளியின் இறுதிப் போட்டி நடந்து முடிந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதனை சிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.
அவரின் அந்த பதிவில் ‘its wrapp!! உங்களை அடுத்த சீசன் சந்திக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். மேலும் இந்த முறை யார் டைட்டிலை வென்றார் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. இதோ அவர் பதிவிட்ட புகைப்படம்.
