உலகத்திலேயே முதன் முறையாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமான இரவின் நிழல். இந்த திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பிரிகிடா சாகா. இந்த இரவின் நிழல் திரைப்படம் நான் லீனியர் முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. நடிகை பிரிகிடா சாகா ஆகா ஆகா கல்யாணம் என்ற வெப்சீரிஸ் மூலம் பவி டீச்சராக ரசிகர்கள் மத்தியில் பசுமரத்தாணி போல பதிந்தவர்
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் பேசிய பொழுது பல அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்தார். முக்கியமாக, இந்தப் படத்தில் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடித்துள்ளேன்.

படப்பிடிப்பின்போது 20 பேர் இருந்தனர் இருந்தாலும் படத்தின் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் வலுசேர்க்கும் விதமாக காட்சி என்பதால் மறுக்காமல் நடித்தேன். முதலில் இயக்குனர் பார்த்திபன் இது குறித்து என்னிடம் பேசியபோது தயங்கினேன். அதன் பிறகு என் குடும்பத்தாருடன் கலந்து ஆலோசித்தேன் பார்த்திபன் சாரும் வந்து எங்களுடைய குடும்பத்தாருடன் பேசினார். ஆரம்பத்தில் அனைவரும் ஒரு வித தயக்கத்தோடு தான் இருந்தோம்.

ஆனால், பார்த்திபன் சார் கதையை விவரித்த பிறகு கண்டிப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இந்த காட்சி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தக் கூடியது. நிச்சயமாக இந்த காட்சி கவர்ச்சியாக ஆபாசமாக தெரியாது. ஒரு புனிதத் தன்மையை பார்ப்பவர்கள் உணருவார்கள். இந்த படம் எனக்கு கிடைத்தது மிகப்பெரிய வாய்ப்பு.

இதனை நான் சரியாக பயன்படுத்திக் கொண்டு உள்ளேன் என்று கூறியுள்ளார். வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் முதன் முறையாக உடம்பில் பொட்டுத் துணியில்லாமல் நடித்துள்ள இந்த விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது